உள்ளூர் செய்திகள்

கே.பி.ஆர்., கல்லுாரியில் மென்டர் எக்ஸ் ஹேக்கத்தான்

கோவை: கே.பி.ஆர்., பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில், ஆசிரியர்களுக்கான 24 மணி நேர 'மென்டர் எக்ஸ்' ஹேக்கத்தான் போட்டி நடந்தது. கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், முதல்வர் அகிலா ஆகியோர் தலைமை வகித்தனர்.தொழில் நிறுவன கூட்டமைப்பு பிரிவு சார்பில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 180 ஆசிரியர்கள் பங்கேற்று, தொழில் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட 38 சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்கி செயல்விளக்கத்துடன் சமர்ப்பித்தனர்.துவக்க விழாவில், டாடா ஆட்டோ காம்போனென்ட்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவன் தெர்மல் மேனேஜ்மென்ட் பிரிவு தலைவர் ராஜாமாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார்.நிறைவாக, இந்தோஷெல் காஸ்ட் நிறுவன இயக்குநர் சரவணன் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். சிறந்த தீர்வுகளை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு மொத்தம் ₹50,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்