மாநில அளவிலான 4ம் ஆண்டு கபடி போட்டியில் புரபஷனல் கல்வி நிறுவனம் முதலிடம்
திருப்பூர்: குடியரசு தினத்தையொட்டி, பார்க் பொறியியல் கல்லூரியில் நடந்த, மாநில அளவிலான 4ம் ஆண்டு கபடி போட்டியில், புரபஷனல் கல்வி நிறுவனம் முதலிடம் பெற்றது. கடந்த மாதம் நடந்த மண்டல போட்டியில் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு புரபஷனல் கல்வி நிறுவனம் தேர்வானது. மதுரையில் நடந்த மாநில போட்டியில், தமிழக அளவில் 552 கல்லூரிகளில், ஆறாம் இடத்தை பெற்றது. போட்டியில் விளையாடிய கல்லூரி மாணவர் மணிவாசகம், அண்ணா பல்கலை அணிக்கு தேர்வாகி உள்ளதாக, புரபஷனல் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.