உள்ளூர் செய்திகள்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக 4 புதிய பல்கலைக்கழகங்கள்

அங்காடிப்புரம்: ‘வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக நாட்டில் நான்கு புதிய பல்கலைக்கழகங்களை மத்திய அரசு அமைக்கும்’ என வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கான மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். கேரளாவில் மலப்புரம் மாவட்டம், அங்காடிப்புரத்தில் பத்திரிகையாளர்களிடம், அவர் கூறுகையில், ‘வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களின் குழந்தைகள் கல்வி பயில வசதியாகப் புதிய பல்கலைக்கழகங்கள் துவக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ளன. அதுகுறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. நாட்டில் நான்கு புதிய பல்கலைக்கழங்கள் அமைக்க ஆலோசிக்கப்படுகிறது. இதில், ஒரு பல்கலைக்கழகம் பெங்களூரில் அமைக்கப்படும். அரேபிய நாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேவேளையில் 2008ம் ஆண்டு வளைகுடா நாடுகளுக்கு 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் திரும்பிச் சென்றுள்ளனர்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்