காலியாக உள்ள 43,886 பொறியியல் சேர்க்கை இடங்கள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் பொதுப்பிரிவு கலந்தாய்வின் போதே நிரம்பிவிட்டன. அதேப்போல சென்னை அண்ணா பல்கலையின் உறுப்புக் கல்லூரிகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. பிற பகுதி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் சுமார் 585 இடங்கள் காலியாக உள்ளன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 43,301 இடங்கள் காலியாக உள்ளன. 13ம் தேதி எஸ்.சி. (அருந்ததியினர்) பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 16 மற்றும் 17ம் தேதிகளில் தொழிற் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. காலியாக உள்ள பொறியியல் இடங்கள், இந்த கலந்தாய்வு மூலம் ஓரளவிற்கு நிரப்பப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.