திருவள்ளூர் மாவட்டம் 6 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தி்ல் 6 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இதன்படி திருவெற்றியூர், அயனம்பாக்கத்தி்ல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், புங்கத்தூர், செவ்வாய்பேட்டை ஆதி திராவிடர் நலப்பள்ளிகள்,மற்றும் சுப்பாரெட்டி பாளையம், பழைய நாப்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, மேலும் மாவட்டத்தில் உள்ள பிற அரசு தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவி்த்துள்ளது.