எய்ம்ஸ் தரத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்
இந்தியாவின் 6 நகரங்களில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான தரத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட உள்ளன. பாட்னா, ராய்ப்பூர், போபால், புவனேஸ்வர், ஜோத்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய நகரங்களில் கட்டப்பட உள்ள அந்த மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொன்றும் தலா 100 இடங்களை கொண்டிருக்கும். ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் ரூ.847 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. கட்டுமானப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையும். அடுத்த கல்வியாண்டு முதல் அவை செயல்படத் தொடங்கும். இந்த மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்து சிறப்பு வசதிகளை கொண்ட மருத்துவமனைகளும் கட்டப்படுகின்றன. ஆனால் அவைகளின் கட்டுமானப் பணிகள் 2012 ம் ஆண்டுதான் முடிவடையும். இந்த 6 கல்லூரிகளும் புதிதாக 600 எம்.பி.பி.எஸ். இடங்களைக் கொண்டிருக்கும். இந்த கல்லூரிகள் பிரதான் மந்த்ரி ஸ்வஸ்த்யா சுரக்ஷா திட்டத்தின் கீழ் கட்டப்படுகின்றன.