பொதுப்பிரிவில் இதுவரை 63,118 பேர் சேர்க்கை
அதேசமயத்தில் வராதோர் எண்ணிக்கையும் 16,626 என்ற அளவில் உயர்ந்துள்ளது. வந்தும், எதையும் தேர்வு செய்யாதவர்கள் 192 பேர். நிராகரித்தவர்கள் 2 பேர். எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவை மொத்தம் 15,553 மாணவர்கள் தேர்வு செய்திருக்கும் நிலையில், மெக்கானிக்கல் பிரிவை மொத்தம் 12,393 பேர் தேர்வு செய்துள்ளனர். தமிழ் மீடியம் படிப்புகளான சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளை முறையே, 129 மற்றும் 120 மாணவ-மாணவிகள் தேர்வு செய்துள்ளனர். இதுவரை சுயநிதி பொறியியல் கல்லூரிகளை மொத்தமாக 52,163 மாணாக்கர்கள் தேர்வு செய்துள்ளனர். அண்ணா பல்கலையை 6,409 பேரும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை 4,546 பேரும் தேர்வு செய்துள்ளனர். இந்தாண்டு, ஏறக்குறைய 50,000 பொறியியல் காலியிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.