சிவில் இன்ஜினியரிங்கில் 6499 பேர் சேர்ந்தனர்
இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவில் 6111 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் 1954 பேர் மாணவர்கள், 4157 பேர் மாணவிகளாவர். பாடப்பிரிவு வாரியாக பார்க்கும் போது எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவில்தான் அதிகப்படியாக 17,246 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் மாணவிகளே அதிகமாக சேர்ந்துள்ளனர். மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ள மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் மொத்தம் 14,349 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 82 பேர் மட்டுமே மாணவிகளாவர். பயோ டெக்னாலஜி பாடப்பிரிவில் 641 பேரும், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் 466 பேரும், ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 1033 பேரும் சேர்ந்துள்ளனர். அதிகபட்ச மாணவர்கள் சேர்ந்துள்ள 3வது பாடப்பிரிவாக கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் உள்ளது. இதில் 11,460 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். சிவில் இன்ஜினியரிங் தமிழ் மீடியப் படிப்புகளில் மொத்தமுள்ள 657 இடங்களில் 158 பேரும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தமிழ் மீடியப் படிப்புகளில் மொத்தமுள்ள 717 இடங்களில் 144 மாணவர்களும் சேர்க்கை பெற்றுள்ளனர். இதர பாடப்பிரிவுகளில் இதுவரை 3344 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் ஒட்டு மொத்தமாக உள்ள 1,47,732 இடங்களில் ஆகஸ்ட் 1ம் தேதி மாலை வரை 71,138 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 38,761 பேர் மாணவர்கள், 32,377 பேர் மாணவிகளாவர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த கல்வியாண்டில், மாணவ சேர்க்கை முடிந்த பிறகு பொறியியல் காலியிடங்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.