உள்ளூர் செய்திகள்

பொதுப்பிரிவு கவுன்சிலிங்கின் 7 நாள் முடிவில் வராதவர்கள் 6,981 பேர்

7 நாட்களில் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,109 பேர். அவர்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 24,016 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 112. யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஏழாவது நாளில் மட்டும், 4,578 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் ஆப்சென்ட் ஆனவர்கள் 1,096 பேர் மற்றும் வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 11 பேர் போக, ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,471 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 23.94%. தொழிற்பிரிவு கவுன்சிலிங் தொழிற்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 5 நாட்கள் முடிவடைந்த நிலையில், 1,548 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,875 பேர். அவர்களில் வராதவர்கள் 320 பேர் மற்றும் வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 7 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 17.07%.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்