உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு 75% வருகைப் பதிவு கட்டாயம்!

பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 75 சதவீத வருகைப் பதிவுக்குக் குறைவாக இருந்தால் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. குறைந்த பட்ச வருகைப் பதிவு இருக்க வேண்டும் என்பதை அனைத்துப் பள்ளிகளும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 சதவீத அளவுக்கு வருகைப் பதிவு குறைவாக இருப்பவர்கள், பள்ளி முதல்வர் அல்லது சி.பி.எஸ்.இ., போடு தலைவரை உரிய காரணங்களுடன் அணுகி சிறப்பு அனுமதி பெறவும்அனுமதிக்கப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்