உள்ளூர் செய்திகள்

பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைகள் இந்தியாவில் கல்வி வளாகம் தொடங்கும்: பிரதமர் மோடி

மும்பை: “நம் நாட்டில், பிரிட்டன் நாட்டின் ஒன்பது பல்கலை வளாகங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக கெய்ர் ஸ்டாமர் பதவியேற்ற பின், முதன்முறையாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இரண்டு நாள் பயணமாக வந்த அவருடன், பிரிட்டன் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர், பல்கலை துணை வேந்தர்கள் என, 125 பேர் அடங்கிய குழுவும் வந்துள்ளது.முதல் நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஸ்டாமர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று பேச்சு நடத்தினார். இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளின் உயர்மட்டக் குழுவினரின் சந்திப்பு நடந்தது.கையெழுத்துபின், இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். பொருளாதாரம், கல்வி விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பயிற்சி தொடர்பான ஒப்பந்தங்களை இருவரும் அறிவித்தனர்.அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையின் கீழ், இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவு, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கடந்த ஜூலையில், நான் பிரிட்டன் சென்றபோது, இரு நாடுகளுக்கு இடையே, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.இதனால், இந்தியா - பிரிட்டன் இடையிலான இறக்குமதி செலவு குறையும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; வர்த்தகம் அதிகரிக்கும்.ஒப்பந்தம் கையெழுத்தான சில மாதங்களில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய கல்வி மற்றும் வணிக் குழுவுடன் ஸ்டாமர் இந்தியா வந்திருப்பது, இரு நாடுகளின் நட்புறவில் புதிய அத்தியாயத்தை காட்டுகிறது.முன்னேற்றம்பிரிட்டனின் புகழ்பெற்ற சவுத்ஹாம்ப்டன் பல்கலையின் வளாகம் குருகிராமில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டின் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோச னைக்கு பின், பிரிட்டனைச் சேர்ந்த ஒன்பது பல்கலைகளின் வளாகங்களை நம் நாட்டில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில், மூன்று பல்கலைகள் குஜராத்தில் உள்ள சர்வதேச வர்த்தக தொழில்நுட்ப நகரத்தில் அமையும். இந்தியாவும், பிரிட்டனும் இயற்கையான நட்பு நாடுகள். ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றில் உள்ள பரஸ்பர நம்பிக்கை, நம் உறவுகளுக்கு அடித்தளமாக உள்ளது.தற்போதைய சூழலில், இந்தியா - பிரிட்டன் இடையே வளர்ந்து வரும் நட்பு, உலகின் ஸ்திரத்தன்மைக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக இருந்து வருகிறது.பிரிட்டன் பிரதமர் ஸ்டாமருடனான சந்திப்பில், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் கடல் பாதுகாப்பு, மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது.உக்ரைன் மோதல் மற்றும் காசா பிரச்னைகளை பொறுத்தவரை, பேச்சு வாயிலாக அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதை இந்தியா ஆதரிக்கிறது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் கூறியதாவது: இந்தியாவில், எங்கள் நாட்டின் ஒன்பது பல்கலைகளின் வளாகங்களை துவக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, இந்தியாவின் முன்னணி சர்வதேச உயர்கல்வி வழங்குநராக பிரிட்டனை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. ராணுவ பயிற்சி ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் வாயிலாக, இந்திய விமானப் படையின் விமானிகள், பிரிட்டனில் பயிற்சியாளர்களாக பணியாற்றுவர். பிரிட்டன் ராணுவ விமானிகளுக்கு இவர்கள் பயிற்சி அளிப்பர். தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் உலகளாவிய ஆளுமைகளாக இரு நாடுகளும் அருகருகே நிற்கின்றன. தொழில்நுட்பம், ஏ.ஐ., வாயிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் எங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டோம். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு சரியான இடம் ஒன்று வேண்டும். இதற்கு பிரிட்டனின் ஆதரவு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்