உள்ளூர் செய்திகள்

இலவச கல்வி

தென்காசி: சமுதாயத்தில் ஒருவருக்கு இலவச கல்வி அளிக்கும் திட்டம் தனியார் பள்ளியில் வரும் 20ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. செங்கோட்டை ஜெயேந்திரா பள்ளி தாளாளர் ராம்மோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், இலஞ்சி, கட்டளைகுடியிருப்பு, புளியரை மற்றும் சுற்று வட்டார பகுதி ஏழை எளிய மக்கள் நலன்கருதி பள்ளியிலிருந்து ஒரு சில மாணவர்களை கட்டணமின்றி இலவசமாக படிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி கற்க வேண்டும் என்ற ஆவல் உள்ள அதற்கான வசதியில்லாத ஒரு குழந்தையை ஒவ்வொரு சமுதாயத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பரிந்துரை செய்தால், எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க உள்ளோம். இந்த வாய்ப்பை பயன்படுத்த வரும் 20ம் தேதிக்குள் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்