உள்ளூர் செய்திகள்

நுாலகங்கள் திறப்பு

சென்னை: ஐந்து மாதங்களுக்குப் பின், பொது நுாலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில், வாசகர்கள் குறைந்த அளவிலேயே நுாலகத்துக்கு வந்தனர்.வாசகர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து, நுாலகங்களில் அமரும் வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலில், உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது.மேலும், கிருமி நாசினி யான சானிடைசரை பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்த பின், வாசகர்கள் நுாலகங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். முதல் நாளான நேற்று வாசகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.சொந்த புத்தகங்கள் படித்தல், புத்தகங்களை படிக்க வாடகைக்கு எடுத்து செல்லும் பிரிவு மற்றும் ஆய்வுக்கு புத்தகங்களை பயன்படுத்தும் பிரிவு ஆகியன மட்டும், நுாலகங்களில் செயல்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்