மாணவர்களை வெளியேற்றாதீர்
பெங்களூரு: &'&'தேர்வுக்காக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை, பலவந்தமாக வெளியேற்றக்கூடாது. தேர்வு முடியும் வரை, அவர்களை காலி செய்யும்படி கூறக்கூடாது,&'&'என, உயர் கல்வித்துறை அமைச்சருமான, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.டிவிட்டரில் அவர் கூறியதாவது: தேர்வு எழுதும் நோக்கில், மாணவர்கள் விடுதிகளில் தங்கியுள்ளனர். பொறியியல், டிப்ளமா, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களை, தேர்வு முடியும் வரை, பலவந்தமாக வெளியேற்றக்கூடாது. அவர்களுக்கு உணவு உட்பட, அனைத்து விதமான உதவிகளை செய்ய வேண்டும்.கொரோனா விதிமுறைகளை, கடுமையாக பின்பற்றுவதுடன், மாணவர்களின் படிப்புக்கு, முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.