உள்ளூர் செய்திகள்

விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

மதுரை: மதுரை விவசாய கல்லுாரி வளாகம் சமுதாய அறிவியல் கல்லுாரியில் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டாக்டர்கள், விவசாய, ஊட்டச்சத்து விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் நடந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலை தாவர மூலக்கூறு உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் செந்தில்தொடங்கி வைத்தார். தொற்றா நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பிரச்னைகளில் அரிசியின் பங்கு பற்றி விவாதிக்கப்பட்டது.தினசரி உணவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டினை கொண்ட பாரம்பரிய அரிசியை சாப்பிடும் வகையில் அவற்றை கண்டறிந்து பயிரிடுதல் மற்றும் மேம்படுத்துதலின் அவசியம் குறித்தும் தேங்காய் எண்ணெய் முக்கியத்துவம், ஆரோக்கிய சமையல் எண்ணெய் கலவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.பல்கலை இனப்பெருக்கம் மற்றும் மரபியல் இயக்கக இயக்குநர் ரவிகேசவன், வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி டீன் திருநாவுக்கரசு, சமுதாய அறிவியல் கல்லுாரி முதல்வர் காஞ்சனா, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி அகச்சுரப்பியல் துறைத்தலைவர் ஸ்ரீதர், ப்ரீதி மருத்துவமனை முதியோர் நல டாக்டர் ராஜா, ஊட்டச்சத்து நிபுணர்கள் பங்கேற்றனர். பேராசிரியை அமுதா ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்