சகோதரர்களுக்கு பரிசு
சென்னை: தமிழக இளைஞர்கள் நடத்தி வரும் புத்தாக்க நிறுவனம், போயிங் பல்கலை நிறுவனத்தின் விருது பெற்ற தற்காக, முதல்வர் அவர்களை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கினார்.தமிழக அரசு சார்பில், 2019 - 20ம் ஆண்டு, உயர்கல்வி மாணவர்களுக்கு நடத்திய, இ.டி.ஐ.ஐ., ஹேக்கத்தான் போட்டியில், விருதுநகர் மாவட்டம், சேது தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் ராமன், லட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர்.அவர்கள் உருவாக்கிய, மின்காந்த துாண்டுதல் கண்டுபிடிப்புக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.சகோதரர்கள் கல்லுாரி படிப்பு முடித்து, பேக்யார்ட் கிரியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவக்கினர். இந்நிறுவனத்திற்கு, சமீபத்தில் போயிங் பல்கலை கண்டுபிடிப்பு தலைமைத்துவ மேம்பாட்டு நிறுவனம் சார்பில், புத்தாக்க கண்டுபிடிப்புக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.உலக அளவில் கால்தடம் பதித்துள்ள, தமிழக இளைஞர்களைப் பாராட்டி, நேற்று தலைமைச் செயலகத்தில், அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் 50,000 ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் வழங்கினார்.