வழிகாட்டி திருப்புமுனை
திருப்பூர்: திருப்பூர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்ந்துகொண்ட மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.கணேஷ்பாபு, பாளையக்காடு: பிளஸ் 1 முடித்து, எனது மகள் இந்தாண்டு பிளஸ் 2 செல்லப்போகிறார். விரைவில் பொதுத்தேர்வு வந்துவிடும்; கல்லுாரி படிப்பை தேர்வு செய்ய, பெற்றோர் இப்போதிருந்தேதயாராக வேண்டும். அதற்காகவே, வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு வந்திருந்தோம். முன்கூட்டியே,கல்லுாரி படிப்பை முடிவு செய்து, படிக்கலாம் என்ற புதிய உற்சாகம் கிடைத்துள்ளது.சித்ரா, வீரபாண்டி: தற்போதைய காலகட்டத்தில், பொறியியல், மருத்துவம் தவிர, ஏராளமான தொழில்ரீதியான படிப்புகள் வந்துள்ளன. அவற்றை தெரிந்துகொண்டு படித்தால் தான், அதற்கு தகுந்த நுழைவுத்தேர்வு மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்து பயிற்சி பெற முடியும். தினமலர் நாளிதழ் நடத்திய வழிகாட்டி கருத்தரங்கு, இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.மாணவர் லிங்கேஷ்,முத்தணம்பாளையம்: பிளஸ் 2 முடித்திருக்கிறேன்; அடுத்து என்ன செய்யலாம் என்ற ஒரு முடிவையும் எடுக்க முடியவில்லை. எங்குள்ள கல்லுாரியில் சேரலாம் என்பது குறித்தும் குழப்பமாக இருந்தது. வழிகாட்டி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி வாயிலாக, நல்ல தெளிவு கிடைத்துள்ளது; இதுபோல்,ஏராளமான மாணவர் பயன்பெறுவர்.மாணவி தனுஸ்ரீ, கேத்தனுார்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. சி.ஏ., போன்ற தொழிற்படிப்பு படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. வழிகாட்டி கருத்தரங்கு வாயிலாக, பல்வேறு ஆலோசனைகள் கிடைத்துள்ளன; நல்ல முடிவெடுக்க தெளிவு கிடைத்துள்ளது.மாணவர் ரிஷ்வந்த், பெரியார் காலனி: எங்கள் கவனம் பொதுத்தேர்வில் மட்டுமே இருந்தது; இனிமேல் தான், அடுத்த உயர்நிலை கல்வி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சரியான நேரத்தில், தினமலர் நாளிதழ் நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சி என்னை போன்ற ஆயிரக்கணக்கான மாணவரின் வாழ்க்கையை நல்லமுறையில் மாற்றி அமைக்கும். எதிர்காலத்தை தீர்மானிக்க புதிய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.