ஏ.ஐ., விஞ்ஞானி!
மனிதனின் அதிநவீன செயல்பாடுகளில் ஒன்று அறிவியல் கண்டுபிடிப்பு. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கும், அறிவியல் ஆராய்ச்சி தாள்களை எழுதுவதற்கும் விஞ்ஞானிகள் ஏற்கனவே உள்ள அடிப்படைகள் முதல் மேம்பட்ட கோட்பாடுகள் வரை அறிந்துகொள்ள வேண்டும். அடுத்து, அவர்கள் ஒரு ஆராய்ச்சிக் கேள்வியை உருவாக்கி, அதற்கான பதிலைத் தேடி ஒரு பரிசோதனையை வடிவமைத்து, செயல்படுத்த வேண்டும். பிறகு, பரிசோதனையின் முடிவுகளை பகுப்பாய்வு செய்து உரிய விளக்கமளிக்க வேண்டும். எனினும், அது மற்றொரு ஆராய்ச்சி கேள்வியை எழுப்பக்கூடும்.ஆனால், சகானா ஏ.ஐ., லேப்ஸ் நிறுவனம் ஒரு 'ஏ.ஐ., விஞ்ஞானி'யை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. மனிதனின் எந்த உதவியும் இன்றி ஒரு அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆய்வு தாளை எழுதுகிறது. ஒரு ஆய்வு தாளுக்கு ஆகும் செலவு 15 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இது ஒரு விஞ்ஞானியின் மதிய உணவிற்கு ஆகும் செலவை விட குறைவு என்றும் தெரிவித்துள்ளது!