உள்ளூர் செய்திகள்

விழிப்புடன் செயல்படுங்கள்

பத்து மற்றும் பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இனி வரும் நாட்களில் மாணவர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் படித்து நல்ல மதிப்பெண்களை பெற முயற்சிக்க வேண்டும். முதலில் தேர்வு அட்டவணையை ஒரு தாளில் எழுதி வீட்டில் தினமும் உங்கள் கண்ணில் படும்படியான இடத்தில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு செயலாற்றுவது வெற்றிக்கு வழிவகுக்கும். படித்த பாடங்களை அவ்வப்போது திரும்பி படித்து வைத்துக்கொள்ள வேண்டும். கணக்கு பாடத்தை பொறுத்தளவில் தனியாக நோட்டில் எழுதி எழுதி பார்ப்பது நன்மையளிக்கும். எந்த பாடத்தை தாங்கள் சிரமமாக நினைக்கிறீர்களோ அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும். குறிப்பிட்ட பாடத்தின் ஆசிரியரை அணுகி சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற வேண்டும். எத்தகைய சந்தேகங்களானாலும் தயக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு ஆசிரியர்களை சந்தித்து தெளிவு பெறுதல் வேண்டும். ஆசிரியர்கள் தாங்களாக முன்வந்து மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும். இனி வரும் ஒவ்வொரு நாளும் முக்கியமானது என்பதை மாணவர்கள் மனதில் பதிய வைத்து கொண்டு துடிப்புடன் செயல்பட்டு தைரியமாக தேர்வை எதிர்கொண்டு வெற்றிக்கனியை வசப்படுத்துங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்