பிளஸ் 1 மாணவன் சுட்டுக்கொலை
முசாபர் நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில், பள்ளிக்கு அருகே, பிளஸ் 1 மாணவனை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர், பிரேயன்சு, 16. இவர், பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று, பள்ளிக்கு வெளியே நின்ற பிரேயன்சுவை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.இது குறித்து தகவலறிந்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த பள்ளியில், பாதுகாப்பு பணியில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.