உள்ளூர் செய்திகள்

1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க 53,000 நோட் குறிப்பேடு வருகை

நாமக்கல்: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவி-யருக்கு வழங்க, 53,000 நோட் குறிப்பேடு, நாமக்கல் மாவட்டத்திற்கு தருவிக்கப்பட்டுள்ளது.வரும் கல்வியாண்டில், அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில், நிதி உதவி பெறும் வகுப்புகள் மற்றும் சுயநிதி பெறும் பள்ளிகளில், மாநில பாடத்-திட்டத்தின் கீழ், தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகிய-வற்றில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, -மாணவியருக்கு, பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், புத்-தகப்பை, காலணிகள், பூட்ஸ் மற்றும் காலுறைகள், சீருடைகள், மிதிவண்டிகள், கணித உபகரண பெட்டிகள் உள்ளிட்ட நலத்-திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.இவை, பள்ளி திறக்கும் முதல் நாள், மாணவ, மாணவியருக்கு, பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், மற்றும் புவியியல் வரைப்படம் ஆகிய நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படும். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்க, 53,000 நோட் குறிப்பேடு, நேற்று தரு-விக்கப்பட்டது.கரூர் மாவட்டம், புகழூரில் அமைந்துள்ள, டி.என்.பி.எல்.,ல் நிறு-வனத்தில் இருந்து, லாரி மூலம் கொண்டுவரப்பட்டு, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்