உள்ளூர் செய்திகள்

ஜுலை 17ம் தேதி பி.ஆர்க். கலந்தாய்வு

பி.ஆர்க். படிப்பிற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் வராதவர்களும், வந்தவர்களும் அவரவர் கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு ஏற்ற நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த மாணவர்கள், அவர்களது உரிய சான்றிதழ்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகாநந்தா கலை அரங்கில் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வந்து விட வேண்டும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முன்னதாக ரூ.5,000 (எஸ்.சி./எஸ்.டி./எஸ்.சி.ஏ.) மாணவர்களுக்கு ரூ.1000) முன் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். பி.ஆர்க். கலந்தாய்வு கட்-ஆப் காலை 9 மணிக்கு 280.00முற்பகல் 11 மணிக்கு 264.00பிற்பகல் 2 மணிக்கு 245.00மாலை 4 மணிக்கு 190.33


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்