உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு ரூ.17.64 கோடி கடன் கலெக்டர் பூங்கொடி தகவல்

திண்டுக்கல்: நடப்பு கல்வி ஆண்டில் 294 மாணவர்களுக்கு ரூ.17.64 கோடி கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.மாவட்ட நிர்வாகம், கனரா வங்கி சார்பில் திண்டுக்கல் - பழநி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சேக்முகையதீன், ஆர்.டி.ஓ., கமலக்கண்ணன், கனரா வங்கி மேலாளர் அருணாச்சலம், உதவிப் பொதுமேலாளர் பலானிரெங்கநாத், பாரத ஸ்டேட் வங்கி உதவிப் பொதுமேலாளர் திவ்யாதேஜா, தாசில்தார் செழியன் கலந்து கொண்டனர்.கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் 519 மாணவர்கள் கடன் விண்ணப்பம் சமர்ப்பித்ததில் தகுதியான 130 பேர் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.5.50 கோடி கல்விக்கடன் வழங்குவதற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்கள் தேவையான கூடுதல் சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர் அவர்களுக்கும் வழங்கப்படும்.நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் மாவட்டம் முழுவதும் பல்வேறு வங்கிகள் சார்பில் இதுவரை 294 மாணவர்களுக்கு ரூ.17.64 கோடி கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்