பிளஸ் 2 தேர்வு தேதி அடுத்த வாரம் அறிவிப்பு
இதன்படி, பொதுத்தேர்வுக்கான இறுதி வினாத்தாள் தேர்வு பணி நடக்கிறது. ஆனால், எதிர்பாராத மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, அரையாண்டுத் தேர்வு கேள்விக்குறியாகி உள்ளது.இச்சூழலில், மார்ச் 31ம் தேதிக்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, குறுகிய இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மூன்று தேதிகளை, தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது