பிளஸ் 2 தேர்வில் இயற்பியலுக்கு கடைசி இடம்
கடந்தாண்டு மார்ச் 5ல், பிளஸ் 2 தேர்வும், மார்ச் 19ல், பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்கிய நிலையில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 4ம், பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 15 என முன்கூட்டியே துவங்கவுள்ளன.சென்னை, கடலுார் உட்பட 6 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் பொதுத் தேர்வுகள் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே இத்தேர்வுகள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பிளஸ் 2 தேர்வில், முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல் தேர்வு எந்தாண்டும் இல்லாத வகையில் கடைசி தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை குழப்பியுள்ளது.இதேபோல், மார்ச் 22ல் நடக்கும் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்விற்கு பின், ஆறு நாட்கள் விடுமுறைக்கு பின் 29ம் தேதி தான் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. ஏப்.,13ல் தான் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. முன்கூட்டியே அறிவிக்கப்பட்டாலும் ஒரு சில தேர்வை தவிர ஒவ்வொரு தேர்வுக்கும் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வரை விடுமுறை இடைவெளி உள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க பொது செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: பொதுத் தேர்வுகள் அட்டவணை முடிவு செய்வதற்கு முன் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களிடம் கல்வித்துறை சார்பில் கருத்து கேட்கப்படும். ஆனால் இந்தாண்டு அதுபோன்று நடக்கவில்லை. மேலும் வெள்ளப் பாதிப்பால் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டாலும், அதிக விடுமுறை அறிவிப்பு, பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முதல்முறையாக கடைசியாக பட்டியலிடப்பட்டது போன்றவை குழப்பமாக உள்ளது. மேலும் கடைசி திருப்புதல் தேர்வு நடத்த முடியுமா என கேள்வியும் எழுந்துள்ளது என்றார். பிளஸ் 2 தேர்வுகள் விவரம்:மார்ச் 4-ம் தேதி மொழித் தாள்-1மார்ச் 7-ம் தேதி மொழித் தாள்-2மார்ச் 9-ம் தேதி ஆங்கிலத் தாள்-1மார்ச் 10-ம் தேதி ஆங்கிலத் தாள்-2மார்ச் 14-ம் தேதி வேதியியல், கணக்குவியல்மார்ச் 17-ம் தேதி வணிகம், மனையியல், புவியியல்மார்ச் 18-ம் தேதி கணக்கு, விலங்கியல், சத்துணவுமார்ச் 21-ம் தேதி தொடர்பு வழி ஆங்கிலம், இந்தியக் கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு பாடம் (தமிழ்)மார்ச் 23-ம் தேதி அரசியல், புள்ளியல், நர்சிங்மார்ச் 28-ம் தேதி உயிரியியல், தாவரவியல் பௌதீக அறிவியல், வரலாறு, வணிக கணக்குஏப்ரல் 1-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம்10-ம் வகுப்பு தேர்வு விவரம்:மார்ச் 15-ம் தேதி தமிழ் முதல்தாள்மார்ச் 16-ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்மார்ச் 22-ம் தேதி ஆங்கிலம் முதல்தாள்மார்ச் 29-ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்ஏப்ரல் 4-ம் தேதி கணிதம்ஏப்ரல் 7-ம் தேதி அறிவியல்ஏப்ரல் 11-ம் தேதி சமூகஅறிவியல்ஏப்ரல் 13-ம் தேதி விருப்பப்பாடத் தேர்வு தமிழில் எழுத எதிர்ப்புபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழை கட்டாய தேர்வாக எழுத வேண்டும் என்ற, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, தெலுங்கு மொழி மாணவர்கள், கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அரசு பள்ளியில், தெலுங்கில் படிக்கும் மாணவர்கள்,நேற்று, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தொழிற்கல்வி பாடங்களான வேளாண் செயல்முறை, இயந்திரவியல் போன்ற பாடங்கள், வேளாண், இந்திய மருத்துவ படிப்பு, பி.இ., போன்ற படிப்புகளில் சேர அவசியம். ஆனால், அந்த பாடங்களை, தேர்வு அட்டவணையில் குறிப்பிடாமல் விடுவதால், தொழிற்கல்வி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் குழப்பம் அடைகின்றனர். - ஆசிரியர் சங்கத்தினர்.