உக்ரைனில் 2 இந்திய மாணவர்கள் கத்தியால் குத்திக்கொலை!
புதுடில்லி: கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த நாடு, உக்ரைன். இங்குள்ள, உஸ்கரோட் மருத்துவக் கல்லுாரியில், இந்தியர்கள் பலர் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, மூன்று இந்திய மாணவர்களை, உக்ரைன் நாட்டை சேர்ந்த சிலர், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்; இதில், இருவர் உயிரிழந்தனர்; ஒரு மாணவர், காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கப்பட்ட மூவரும், உ.பி.,யை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சிகிச்சை பெற்றுவரும் மாணவர் அளித்த தகவல் அடிப்படையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த மூன்று பேரை, அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளதாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.