பிளஸ் 2 படித்தவர்களும் மாலுமி ஆகலாம்!
பணி: செய்லர் (மாலுமி) வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள், ஆகஸ்ட் 1, 1995ல் இருந்து ஜூலை 31, 1999க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: பிளஸ் 2வில், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை கட்டாயமாக படித்திருக்க வேண்டும். மேலும், வேதியியல் / உயிரியல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றையாவது படித்திருக்க வேண்டும். உதவித்தொகை: ஆரம்ப கட்ட பயிற்சியின் போது, உணவு, தங்குமிடம் ஆகியவற்றுடன் மாதாந்திர உதவித்தொகையாக 5,700 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆரம்ப பயிற்சியினை நிறைவு செய்தவுடன் மாதம் 20,200 ரூபாய் மற்றும் 2,000 ஆயிரம் ரூபாய் தர ஊதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு: ஆங்கிலம், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு போன்ற நான்கு பகுதிகளில் ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். கேள்வித் தாள் மற்றும் தேர்வுக்கான பாடத்திட்டத்தை www.joinindiannavy.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு காலம் ஒரு மணிநேரம். சிறந்த உடல் திறன் அவசியம் என்பதால், விளையாட்டு, நீச்சல் மற்றும் இதர திறன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இரண்டு நகல்கள் எடுத்து, அதனுடன் உரிய ஆவணங்களையும் இணைத்து, இணையதள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சாதாரண தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 6. ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் டிசம்பர் 13. மேலும் விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in