உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள்

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பிளஸ் 2 பொதுத் தேர்வு, மே 3ல் துவங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை, மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைந்து கவனிக்க வேண்டும்.தேர்வுக்கான விடை எழுதும் முதன்மை தாள்கள் மற்றும் மாணவர்களின் தகவல் இடம் பெறும் முகப்பு சீட்டை ஒன்றாக இணைக்க வேண்டும். மொழி பாடங்களுக்கு, 30 பக்கங்களுக்கு புள்ளியிடப்பட்ட, கோடிட்ட வெற்று தாள்கள் வழங்கப்படும். கூடுதல் விடைத்தாள்களும் அதேபோல் வழங்கப்படும். உயிரியலுக்கு, தாவரவியல், விலங்கியல் என, தனித்தனி முதன்மை தாள்கள்,ஒரே முகப்பு தாளுடன் வழங்கப்படும். கணக்கு பதிவியலுக்கு, கட்டங்கள் உள்ள விடைத்தாள்கள் தரப்படும்.வரலாறு தேர்வுக்கு இந்திய வரைபடம் மற்றும் உலக வெளிப்புற வரைபட தாள் இணைக்கப்படும். புவியியலுக்கு ஒரு வெளிப்புற வரைபட தாள் தரப்படும். வணிக கணிதம் மற்றும் புள்ளியியலுக்கு, வரை கட்ட தாள் தரப்படும். இவ்வாறு, பல்வேறு தகவல்கள் அவற்றில் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்