பிளஸ் 2 வினாத்தாள் திருத்தம் எப்போது?
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 23ல் துவங்குகிறது. பாடவாரியாக விடைத்தாள்களுக்கு "டம்மி" எண் வழங்கும் பணி நடந்து வருகிறது. பிளஸ் 2 தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்கள் திருத்தும் பணி அந்தந்த மாவட்ட மையங்களில் மார்ச் 23ல் துவங்க உள்ளது. இதில் முதன்மை தேர்வாளர்கள் கலந்து கொள்வர். மார்ச் 24 முதல் உதவி தேர்வாளர்கள் மூலம் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கவுள்ளன. இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் விடைத்தாள்களுக்கு "டம்மி" எண் வழங்கும் பணி மூன்று மண்டலங்களில் நேற்று முதல் துவங்கியது. இப்பணிக்கு பின், விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கி ஏப். 20ல் முடிவடையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.