உள்ளூர் செய்திகள்

குரூப்-2 தேர்வு முடிந்தது

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில், தலைமை செயலக உதவிப் பிரிவு அலுவலர், வணிகவரி உதவி அலுவலர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட 6,695 காலி பணியிடங்களுக்கான, குரூப் -2 தேர்வு ஜூலை 30ம் தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 104 மையங்களில், 1,729 தேர்வுக்கூடங்களில் நடந்த இத்தேர்வில், நான்கு லட்சத்து 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களில் 80 ஆயிரம் பேர், சென்னையில் 300 தேர்வுக்கூடங்களில் தேர்வெழுதினர். &'குரூப் -1 தேர்வை விட, குரூப் -2 தேர்வு சற்று சுலபமாக இருந்ததாகவும், பொது தமிழ் பிரிவில் கேள்விகள் எளிதாக இருந்ததாகவும்&' போட்டியாளர்கள் தெரிவித்தனர். கோர்ட்டில் வழக்கு உள்ளதால், கடந்த ஆண்டு நடந்த குரூப் -2 தேர்வில், தேர்வானவர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்