பிளஸ் 2 பொதுத்தேர்வு 119 பேர் ஆப்சென்ட்
மதுரை: மதுரையில் நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 119 பேர் பங்கேற்கவில்லை. கணிதத்தில் 19,996, விலங்கியலில் 2257, மைக்ரோ பயாலஜியில் 110 மற்றும் சத்துணவியல் தேர்வில் 85 மாணவர்களும் பங்கேற்றனர். மூன்று பாடங்களிலும் 119 பேர் தேர்வு எழுத வரவில்லை. சத்துணவியலில் ஆப்சென்ட் இல்லை.