பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை
சேலம்: தமிழகத்தில் கடந்த கல்வி யாண்டில் , அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3.51 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். 3.23 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.அனைவரும் டிப்ளமா , பட்டப்படிப்பு, தொழில் படிப்பு என உயர்கல்வியை தொடர, 'நான் முதல்வன்' திட்டத்தில், இரு ஆண்டாக வழிகாட்டப்பட்டன. ஆனாலும் இதுவரை, 16,929 மாணவ - மாணவியர், உயர்கல்வியில் சேரவில்லை.இதனால், அந்தந்த பள்ளி மேலாண்மை குழு உதவி யுடன் உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.