உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு 80 ஆயிரம் விடைத்தாள் நகல்

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பின், விடைத்தாள் நகல் கேட்டு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில், பெரும்பாலான மாணவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். அந்த வகையில், மொத்தம், 80 ஆயிரம் விடைத்தாள் நகல்கள், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கான, சிறப்பு அலுவலர் நரேஷ் கூறியதாவது: மறு மதிப்பீடு அல்லது மறு கூட்டல் செய்ய விரும்பினால், விடைத்தாள் நகல் பெற்ற தேதியில் இருந்து, ஐந்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறு மதிப்பீடு செய்ய முடிவு செய்தால், பாட ஆசிரியரின் ஆலோசனையை மாணவர்கள் கேட்க வேண்டும். மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தால், அதில் பெறக் கூடிய மதிப்பெண்கள் தான் இறுதியானது. எனவே, முதலில் பெற்ற மதிப்பெண்கள் அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு இருக்கிறது. இதனால், மாணவர்கள் நன்றாக யோசித்து, அதன்பின் முடிவு எடுப்பது நல்லது. இவ்வாறு நரேஷ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்