உள்ளூர் செய்திகள்

டிச., 20ம் தேதி மாநில வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிப் போட்டி

கோவை: மாநில வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிப்போட்டி கோவையில் டிச., 20ம் தேதி நடக்கிறது. கோவை மாவட்ட வாலிபால் சங்க கவுரவ செயலாளர் ஆறுச்சாமி அறிக்கை: மாநில அளவில் இளைஞர்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள்(ஆண், பெண்) சேலம், அஸ்தம்பட்டி, சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில், வரும் டிச., 27ல் துவங்கி டிச., 30ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு அதற்கான தகுதிப்போட்டி, கோவை நேரு ஸ்டேடியத்திலுள்ள மைதானத்தில், டிச., 20ல் நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் பெண்களுக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் ஆண்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும். கடந்த 1994 ஜன., 1ம் தேதி அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்கலாம். தகுதிப் போட்டிக்கு வரும்போது வீரர் மற்றும் வீராங்கனைகள், அசல் பிறப்பு சான்றிதழை அவசியம் வைத்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422, 240 1151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்