தமிழகத்தில் 23 புதிய பொறியியல் கல்லூரிகள்
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 23 கல்லூரிகளையும் சேர்த்து தமிகததில் உள்ள பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் 484 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இருந்தன. இந்த நிலையில் 2011-12ம் கல்வியாண்டில், 100க்கும் மேற்பட்ட அமைப்புகளும், கல்லூரிகளும் புதிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) விண்ணப்பித்திருந்தன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட ஏஐசிடிஇ, ஒவ்வொரு கல்லூரியாக அனுமதி அளித்து வருகிறது. அதன்படி இந்த கல்வியாண்டில் இதுவரை 23 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசீலித்து புதிய கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் பணி நடைபெற்று வருவதால், தமிழகததில் மேலும் புதிய பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.