உள்ளூர் செய்திகள்

250 மாணவருக்கு கிடைத்தது வேலை

திருப்பூர்: திருப்பூர், நிப்ட்-டீ கல்லுாரியில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், கல்லுாரி நிர்வாகம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.தி சென்னை சில்க்ஸ், பூமெக்ஸ், வால்க்ரோ, காஸ்மோ டெக்ஸ் உள்ளிட்ட, 45 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றனர்.மேனுபாக்சரிங், மெர்ச்சன்டைசிங், லேப் டெக்னீசியன், டிசைனிங், ரீடைல் மேனேஜ்மென்ட் போன்ற காலி பணியிடங்களை நிரப்ப, நேர்காணல் நடத்தப்பட்டது. முகாமில், 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒவ்வொரு நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்று, ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.அதன்வாயிலாக, 250 பேர் வேலை வாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு, நியமன கடிதம் வழங்கப்பட்டதாக, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்