உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் 3 வெளிநாட்டு பல்கலை வளாகங்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல்

சென்னை: நம் நாட்டில், வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களை அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.நம் நாட்டில் உலக பல்கலைகளின் கிளைகளை அமைக்கவும், வெளிநாடுகளில், இந்தியாவின் ஐ.ஐ.டி., உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கிளைகளை அமைக்கவும், மத்திய கல்வி அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.இதன்படி, பிரிட்டன் நாட்டின் பிரிஸ்டல் பல்கலை, அதே நாட்டில் ஆராய்ச்சி படிப்புகளின் முன்னோடியாக உள்ள யார்க் பல்கலை, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலை ஆகியவற்றின் கிளைகளை, இந்தியாவில் அமைக்க, மத்திய அரசு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.இதையடுத்து, அந்த பல்கலைகளும் தங்களின் விருப்பங்களை தெரிவித்தன. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உயர்கல்வி செயலரும், பல்கலை மானியக் குழு தலைவருமான வினீத் ஜோஷி ஆகியோர், அதற்கான ஒப்புதல் கடிதங்களை, பிரிஸ்டல் பல்கலை நிர்வாகத் தலைவர் மிஷெல் ஜோன்ஸ், யார்க் பல்கலை துணை வேந்தர் சார்லி ஜெப்ரி, நியூ சவுத் வேல்ஸ் பல்கலை பேராசிரியர் சாரா மேடிசன் ஆகியோரிடம் வழங்கினர். இந்த தகவலை, மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்