உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு ஜுலை 18ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்

சென்னை: பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, ஜுலை 18ம் தேதி, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு: பத்தாம் வகுப்பு உடனடி தேர்வை எழுதிய தனி தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில், 18ம் தேதி (நாளை), மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, ஒரு மாதம் முன்கூட்டியே, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள், மறுகூட்டல் செய்ய விரும்பினால், வரும், 21ம் தேதி முதல், 23ம் தேதி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்