உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய 51 வயது பெண்

கரூர்: கரூரில் 51 வயது பெண் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதினார்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த சேட்டு மனைவி ராகிலா பானு. கடந்த 1989ல் ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு குடும்ப சூழலால் பள்ளி செல்லவில்லை. சத்துணவு மையத்தில் சமையலராக 12 ஆண்டுகளாக பணிபுரிகிறார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் அமைப்பாளர் பதவிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஐந்து பாடங்களுக்கு தேர்வெழுதி இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றார். மீதி மூன்று பாடங்களுக்கு தற்போது துணைத்தேர்வு எழுதுகிறார். கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடத்தேர்வை ராகிலா பானு  எழுதினார். மகன் சாகுல் அமீது தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார், என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்