உள்ளூர் செய்திகள்

10 நாட்களில் 34,743 பேர் ஒதுக்கீடு பெற்றனர்!

அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46,280. வராதவர்கள் 11,383 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 154 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 24.60%. 10வது நாளில் மட்டும் 6,220 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 1,849 பேர் வரவில்லை மற்றும் 17 பேர் கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யவில்லை. யாரும் நிராகரிக்கப்படாத நிலையில், இறுதியாக, 4,354 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 29.73%. தொழிற்பிரிவு கவுன்சிலிங் 8 நாட்கள் முடிவடைந்த நிலையில், தொழிற்பிரிவு கவுன்சிலிங்கில் மட்டும், 818 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இதுவரை மொத்தம் அழைக்கப்பட்டவர்கள் 3,277 பேர். அவர்களில், ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 2,444. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 15 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 24.96%.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்