11ம் தேதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்கி, 28ல் முடிந்தது. ஏழு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். மார்ச் 23ல் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கின. 45 மையங்களில், 5,000 ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், தமிழ் விடைத்தாள் திருத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நிலைமையை சமாளிக்க, கூடுதல் விடைத்தாள்கள் திருத்தும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வரும் 11ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவு, ஆசிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.