உள்ளூர் செய்திகள்

ஆக.,12, 13ல் பிரதிநிதிகள் மாநாடு: அரசு ஊழியர்கள் சங்கம்

அரசு துறைகள், பணியிடங்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் மாநாடு நடக்க உள்ளது என பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது, நிலுவையில் உள்ள அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு நிலுவையை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் லட்சுமிநாராயணன் கூறியதாவது:அரசு ஊழியர்கள் கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். மேற்கண்ட கோரிக்கைகளில் பழைய பென்ஷன் திட்டம் எங்கள் கோரிக்கை மட்டுமின்றி, தி.மு.க.,வினரின் தேர்தல் வாக்குறுதியும் அதுதான். எனவே அதனை நிறைவேற்ற வேண்டும். அரசு துறைகளில் காலியிடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை அரசு அவுட்சோர்ஸிங் மூலம் நிரப்புவதன் மூலம் பணியிடங்களை பறிக்கிறது. காலியிடங்களில் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். அகவிலைப்படியை பொறுத்தவரை, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு 2021 ஜனவரியில் வழங்கியதை தமிழக அரசு ஜூலையில் வழங்கியது.இவ்வாறு மூன்றாண்டுகள் தாமதத்தால் அரசு ஊழியர்களுக்கு 44 சதவீதம் இழப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் 21 சதவீதம், தி.மு.க., ஆட்சி காலத்தில் 12 சதவீதம் இழப்பு ஏற்பட்டது. இதுபோன்று பொருளாதார பலன்களை பறிப்பதும் கூடாது. இது ஏற்புடையதும் அல்ல. இவற்றை வலியுறுத்தி ஆக.,12, 13ல் திருப்பூரில் மாநில பிரதிநிதிகள் மாநாடு நடக்க உள்ளது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 1200 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்