உள்ளூர் செய்திகள்

15 புதிய இளநிலை பட்டப்படிப்புகள் அறிமுகம்

தமிழக சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் இத்தகவலை கூறினார். உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய பழனியப்பன், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்வதைக் கருத்தில் கொண்டு மாறிவரும் காலச் சூழல்களுக்கு ஏற்பவும் புதிய பாடப்பிரிவுகளை நடப்பு கல்வியாண்டிலேயே தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 12 கல்லூரிகளில் 15 புதிய இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதுபோல் 35 கல்லூரிகளில் புதிய முதுநிலை மற்றும் எம்.·பில். படிப்புகள் தொடங்கப்பட உள்ளன என்று கூறினார். மேலும், மாணவர்களின்  கம்ப்யூட்டர் திறனை மேம்படுத்தும வகையில் 23 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கம்ப்யூட்டர் மற்றும் அதைச் சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்