உள்ளூர் செய்திகள்

1,600 கி.மீ., பயணித்து 2 பெண்கள் விழிப்புணர்வு

நாமக்கல்: நாமக்கல் கங்காநகரை சேர்ந்த சித்திக் பாட்ஷா, பானு தம்பதியரின் மகள் ஆயிஷா, 23; இவரது தோழி பெரம்பலுாரை சேர்ந்த அபர்ணா, 23; அவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள மலை பகுதிகளுக்கு, டூவீலரில் பயணம் மேற்கொண்டு, பெண்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான துவக்க நிகழ்ச்சி, நாமக்கல் பூங்கா சாலையில், நேற்று முன்தினம் நடந்தது. இருவரின் பயணம் வெற்றிப்பெற பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, பைக் ரைடர் ஆயிஷா கூறியதாவது:பெண்களால், அனைத்து துறையிலும் சாதிக்க முடியும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கின்றனர் என்பதை வலியுறுத்தி தான் தானும், எனது தோழியும், இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள கொல்லிமலை, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட, 15 மலைப்பகுதிகளுக்கு, 7 நாட்களில், 1,600 கி.மீ., துாரம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்