உள்ளூர் செய்திகள்

1820 பணியிடங்களுக்கு குரூப்-2 தேர்வு அறிவிப்பு

சென்னை: சார் - பதிவாளர், துணை வணிக வரி அதிகாரி உட்பட, 61 பதவிகளில், 1820 காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் - 2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 14, காலை 9:30 முதல் 12:30 மணி வரை இந்த தேர்வு நடக்க உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று துவங்கியது. ஜூலை 19 இரவு 11:59 மணியுடன் பதிவு முடிகிறது.விண்ணப்பங்களில் பிழைகள் இருந்தால், ஜூலை 24 முதல் 26ம் தேதிக்குள் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிரதான தேர்வு தனியாக நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, சார் - பதிவாளர், வனவர், கூட்டுறவு துறை மூத்த ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், கைத்தறி ஆய்வாளர், பேரூராட்சி செயல் அதிகாரி உட்பட, 61 பதவிகளில், 1820 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இது குறித்து கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்