19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை: “சென்னையில், 19ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது” என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் வெளியிட்ட அறிக்கை:சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 19ல் நடத்த உள்ளன.இந்த முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், காலை 10:00 முதல் 02:00 மணி வரை நடக்கிறது; 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.இதலில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள அனைவரும் பங்கேற்கலாம். நுழைவு கட்டணம் கிடையாது.பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.