உள்ளூர் செய்திகள்

19ல் சிவில் நீதிபதி எழுத்து தேர்வு

தமிழ்நாடு முழுவதும், சிவில் நீதிமன்றங்களில், 245 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வரும் 19ம் தேதி முதல்நிலை தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விழுப்புரம் ஆகிய இடங்களில், 45 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ராஜவீதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி ரோடு, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பெரிய கடை வீதி, மைக்கேல் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 1,369 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9:30 முதல் மதியம் 12:30 வரை தேர்வு நடைபெறும். முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சசிரேகா, சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி கோவிந்தராஜன், முதன்மை லேபர் கோர்ட் நீதிபதி லதா, நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், தலைமை குற்றவியல் நீதிபதி சுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில், தேர்வு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்