198 முதுகலை ஆசிரியர்கள் புதிதாக தேர்வு
சென்னை: முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் சேராத மற்றும் உரிய தகுதி இல்லாத ஆசிரியர்களின் நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிதாக 198 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேவலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு சீனியாரிட்டியில் அடுத்த நிலையில் உள்ள 198 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்து, ஆசிரியர் தேர்வு வாரியம் டிச. 16ம் தேதி மாலை பட்டியலை வெளியிட்டது.