உள்ளூர் செய்திகள்

21ல் அரசு கல்லுாரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான கவுன்சிலிங், கடந்த மே, 29ல் துவங்கியது.சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உட்பட, பொது பிரிவினருக்கு ஜூலை இறுதி வரை கவுன்சிலிங் நடந்தது; மாணவ, மாணவியர் கல்லுாரிகளை தேர்வு செய்தனர். இளங்கலை பட்டப்படிப்புக்கான வகுப்பு துவங்கி நடந்து வருகிறது. தற்போது வரை கல்லுாரிகளில் பூர்த்தியாகாமல், காலியாக உள்ள, இடங்களை நேரடி சேர்க்கை மூலம் நிரப்ப உயர்கல்வித்துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி., (வேதியியல்) ஒரு இடம், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் அறிவியல் - 2, பி.எஸ்.சி., கணிதம் (தமிழ் வழி) - 20, ஆங்கில வழி - 18, என மொத்தம், 41 சீட் காலியாக உள்ளது. எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், பி.எஸ்.சி., விலங்கியல் - 4, பி.எஸ்.சி., வேதியியல் - 1, கணிதம் - 1, என மொத்தம், ஆறு &'சீட்&' காலியாக உள்ளது. உடுமலை அரசு கலைக்கல்லுாரி - 22, காங்கயம் - 63, அவிநாசி - 2, பல்லடம் - 30, தாராபுரம் - 61 என மாவட்டத்தில் மொத்தம், 225 இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களுக்கு நேரடி சேர்க்கை கல்லுாரியில், வரும், 21ல் காலை, 10:00 மணிக்கு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்