உள்ளூர் செய்திகள்

25ம் தேதி கல்விக்கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம், வரும் 25ம் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.அன்றைய தினம், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும் முகாமில், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.மாணவர்கள் மற்றும் பெற்றோரின் புகைப்படங்கள், வங்கிக் கணக்கு புத்தக நகல், வருமானச் சான்று, ஜாதிச் சான்று, ஆதார், பான் கார்டு, கல்விச் சான்றிதழ்கள், கட்டண விவரம் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை 0421-2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்